பதிவு செய்த நாள்
25
டிச
2019
02:12
காஞ்சிபுரம்:வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, சப் - கலெக்டர் சரவணன் மற்றும் அதிகாரிகள், வைகுண்ட பெருமாள் கோவிலில், நேற்று 24ல் ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வைகுண்ட பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறும்.சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து, லட்சக்கணக்காண பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனத்திற்கு செல்வர்.வரும் ஜனவரி, 6ம் தேதி, அதிகாலை, கோவில் மேல்தளத்தில் உள்ள பரமபத வாசல் திறக்கப்படுகிறது.
இதற்காக, அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்வர்.இதில் பங்கேற்கும், பக்தர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சப் - கலெக்டர் சரவணன், கோவிலில் நேற்று, ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கோவில் செயல் அலுவலர்கள் குமரன், வெள்ளைச்சாமி, நகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் இருந்தனர்.பக்தர்கள் செல்வதற்கு வழி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும்படி, சப் - கலெக்டர் சரவணன், அதிகாரி களிடம் அறிவுறுத்தினார்.அதேபோல், அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், 6ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டைப்போல், கோவிலுக்கு வெளியே பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட உள்ளது.