பதிவு செய்த நாள்
25
டிச
2019
02:12
திருப்போரூர்:கர்நாடக மாநில செவ்வாடை பக்தர்கள், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் குவிந்தனர்.
கர்நாடக மாநில ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர், விரதமிருந்து, ஆதிபராசக்தி அம்மனுக்கு மாலை அணிந்துள்ளனர்.இவர்கள், அம்மாநில அரசு பஸ்களை வாடகைக்கு எடுத்து, மேல் மருவத்துார் சித்தர் பீடத்திற்கு, வழிபாட்டுக்கு வருகின்றனர்.அம்மனை தரிசித்த பின், கந்தசுவாமியை வழிபட, திருப்போரூருக்கு படையெடுக்கின்றனர்.அவ்வாறு குவிந்துள்ள கர்நாடக பக்தர்கள், நேற்று, சரவண பொய்கை குளத்தில் நீராடி, சுவாமியை தரிசித்தனர்.
கந்தசுவாமி கோவிலுக்கு வரும் வாகனங்களிடம், பேரூராட்சி நிர்வாகம், கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், வாகனங்களுக்கு, ’பார்க்கிங்’ வசதியை ஏற்படுத்தாமல், மாடவீதி களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கிறது.இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.