பதிவு செய்த நாள்
25
டிச
2019
03:12
பொள்ளாச்சி வடசித்துாரில், சோழர் கால கற்கோவில் அமைந்திருப்பது, தஞ்சாவூர் கல்வெட் டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
வடசித்துார் கிராமத்தின் நடுவே, ஊராட்சி அலுவலகத்தின் எதிரில், முற்றிலும் பாறை கற் களால் அமைந்த கோவில் உள்ளது. நீளமாக செதுக்கப்பட்ட, பட்டை கற்களை கொண்டு அடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், 700 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்.கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோவிலுக்குள்,மூன்றடி உயர, சிவபெருமான் லிங்க வடிவில் மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தினமும் ஒரு கால பூஜை நடக்கிறது. சிறப்பு பூஜை மற்றும் பிரதோஷம், பவுர்ணமி, சிவராத் திரி மற்றும் ஜோதிவழிபாடு நாட்களில் பால், தயிர் மற்றும் அபிேஷகத்தால் பூஜை மேற்கொள்ளப்பட்டு, சுவாமி குளிர்விக்கப்படுகிறார்.கடந்த சில நாட்களாக, மார்கழி மாத அதிகாலை பூஜை சிறப்புடன் நடக்கிறது. கோவில் முன்பகுதியில் மக்கள் வழிபாட்டுக்கு வைத்திருந்த நந்திசிலை, பல ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்டு விட்டதாக மக்கள் கூறுகின்றனர். அதற்கு மாற்றாக, நந்தி உருவத்தில் கருங்கல் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பல தலைமுறைகளுக்கு முன், கோவிலுக்கு முன்பாக இருந்த கற்பக விருட்சம் தற்போது இல்லை. மாறாக, தங்க அரளி மரம் மலர்களுடன் பூத்து குலுங்குகிறது. வாய் பேச முடியாத வாலிபர், கோவில் பூசாரியாக சேவை புரிந்து வருகிறார்.