ராமேஸ்வரம்: மார்கழி அமாவாசையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். நேற்று மார்கழி அமாவாசையை முன்னிட்டு தமிழகம், வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பின் பக்தர்கள் முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்பண பூஜை செய்தனர். அக்னி தீர்த்த கடலில் சிவசிவ என கோஷமிட்டு புனித நீராடினார்கள். பின் கோயிலுக்குள் 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடிய பிறகு சுவாமி, அம்மன் சன்னதியில் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். நேற்று கோயில் சன்னதி தெரு, நான்கு ரதவீதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.