பதிவு செய்த நாள்
26
டிச
2019
10:12
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி உற்ஸவம் நடந்தது. திருப்பரங்குன்றம் ரயில்வே பீடர் ரோடு வீரஆஞ்சநேயர் கோயிலில் மகா சுதர்ஸன ஹோமம் முடிந்து மூலவர், உற்ஸவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தன. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் ஆஞ்சநேயர் முன் யாகம் வளர்க்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தன. சுவாமிக்கு வடைமாலை சாத்துப்படியானது.
எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளி அம்மன் கோயில், மகாலட்சுமி காலனி வரசித்தி விநாயகர் கோயில், பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயிலில் அனுமன் ஜெயந்தி நடந்தது.
பேரையூர்: நல்லமரம் ஆஞ்சநேயர் கோயிலில் அபிஷேகம், கோ பூஜை, பாலாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஜோதிடர் அறிவழகன் செய்தார்.
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பொன்பெருமாள்மலை ஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு அர்ச்சகர் மணிகண்டன் தலைமையில் சிறப்பு அபிஷேகம் நடந்தன.சோழவந்தான் இரட்டை அக்ரஹாரம் மங்கள ஆஞ்சநேயர் கோயிலில் பல்வேறு ஹோமம், 26 அபிஷேகம் வரதராஜ பண்டிட் தலைமையில் நடந்தது. பிரளயநாதர் சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.