பதிவு செய்த நாள்
26
டிச
2019
02:12
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சர்ச்சுகளில் சிறப்புபிரார்த்தனை நடந்தது.
ராமநாதபுரம் துாய ஜெபமாலை அன்னை சர்ச்சில் நடந்த சிறப்பு திருப்பலியில் பாதிரியார் அருளானந்து, துணை பாதிரியார்கள் மரியவளன், சைமன், சிவகங்கை மறை மாவட்ட செயலாளர் சந்தியாகு உட்பட பலர் பங்கேற்றனர். ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து பிரார்த்தனையில் பங்கேற்றனர். கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
வீடுகளில் கிறிஸ்து பிறப்பு குறித்து குடில்கள் அமைத்து வண்ண விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டிருந்தது. சக்கரகோட்டை ரேமா சர்ச்சில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பாதிரியார்கள் ஏசையா, ஜான் டேனியல் பங்கேற்றனர். சி.எஸ்.ஐ., சர்ச் உட்பட பல்வேறு கிறிஸ்தவ சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கிறிஸ்தவர்கள் கேக்வழங்கி கொண்டாடினர்.
* திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர், சின்னக்கீரமங்கலம் புனித பேதுரு ஆலயம், ஓரிக்கோட்டை புனித ஜெபமாலை ஆலயம், தொண்டி துாய சிந்தாதிரை ஆலயம், கற்காத்தகுடி புனித இஞ்ஞாசியர் ஆலயம், காரங்காடு அமல அன்னைஉள்ளிட்ட சர்ச்சுகளில் கிறிஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு நேற்று 25ம் தேதி காலை சிறப்பு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு சர்ச்சுகள் வண்ணமின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
*பரமக்குடி அலங்காரமாதா சர்ச்சில் பங்குத்தந்தை சிங்கராயர் தலைமையிலும், உலகநாத புரம் குழந்தையேசு சர்ச்சில் பங்குத்தந்தை அருமைநாயகர் தலைமையில்,நேற்று முன்தினம் 24 ம் தேதி இரவு 8:00 மணிக்கு துவங்கி நள்ளிரவு 12:00 மணிக்கு ஏசு கிறிஸ்து பிறப்பை நினைவூட்டும் வகையில், சிறப்பு திருப்பலி,கூட்டு பிரார்த்தனை பாடல்கள் இசைக்கப்பட்டன. நேற்று 25ம் தேதி காலை புத்தாடை அணிந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல் ஆர்ச் அருகில், காட்டு பரமக்குடி, மேலக்காவனுார், எமனேஸ்வரம்,என அனைத்து சர்ச்களி லும் சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டன. மேலும் சர்ச் மற்றும் வீடுகளிலும் இயேசு பிறப்பை அறியும் வண்ண குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.
*கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு, பரதர் தெரு புனித அந்தோணியார் சர்ச்சில் டிச., 24 இரவு 11:30 மணிக்கு இயேசு கிறிஸ்து பிறந்த நாள் பெருவிழா சிறப்பு திருப்பலியுடன் நடந்தது. நள்ளிரவு 1:30 மணி வரை சிறப்பு வழிபாடு நடந்தது. கிறிஸ்துவின் மறையுரை அருளப்பட்டது. பன்னாட் டார் தெரு அந்தோணியார் சர்ச், கீழக்கரை சி.எஸ்.ஐ துாய பேதுரு சர்ச்சில் சிறப்பு திருப்பலி நடந்தது.
*முத்துப்பேட்டை புனித காணிக்கை அன்னை சர்ச்சில் நள்ளிரவில் பங்குத்தந்தை கூட்டுத் திருப்பலி நடத்தினார். உலக சமாதானம், நன்மை வேண்டி ஜெப நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இனிப்பு கேக்குகள் வழங்கப்பட்டன.மூக்கையூர் புனித யாகப்பார் சர்ச், மேலக்கிடாரம் மடத்தாகுளம் சி.எஸ்.ஐ., சர்ச், கடலாடி புனித அந்தோணியார் சர்ச், சவேரியார் பட்டினம் புனித சவேரியார் சர்ச், சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி சர்ச் ஆகிய இடங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.