Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) முன்னேறிச் செல்ல எதிர்நீச்சல் போடுங்க! ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அமோக வாழ்வளிப்பார் ஆறாமிடத்து சனீஸ்வரர் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குறை ஒன்றுமில்லை குரு பார்ப்பதாலே
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2019
12:19

மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே!


உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு பிறக்கிறது.  இந்த ஆண்டு உங்கள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக நிற்க போகிறவர்  குருபகவான் தான். குருவின் ஏழாம் பார்வை ராசியில் விழுவதால் வாழ்வில்  குறையொன்றும் இருக்காது. செயலில் வெற்றி கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி  அதிகரிக்கும். உற்சாகமுடன் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.  கணவன், மனைவி  இடையே அன்பு மேலோங்கும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம்  கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். குருவின்  பார்வையால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். உறவினர் மத்தியில்  செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.  எண்ணற்ற ஆடம்பர வசதிகள் கிடைக்கும். அதே நேரம் மார்ச் 27ல் இருந்து  ஜூலை 7 வரை  செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடை பிடிப்பது நல்லது.  முயற்சியில் தடைகள் வரலாம். ஆக.31க்கு பிறகு பின்தங்கிய நிலை அடியோடு  மறையும். பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். புதிய வீடு, மனை  வாங்கும் யோகம் உண்டாகும். ஆண்டின்  இறுதியில் சிலர் ஊர் விட்டு ஊர்  செல்லும் நிலை உருவாகும்

பெண்களுக்கு  தடைபட்ட திருமணம் இனிதே கைகூடும். குருவின் 5ம் இடத்துப்  பார்வையால் பணப்புழக்கம் அதிகரிக்கும். அண்டை வீட்டார் உதவிகரமாக  இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் கூட  உங்கள் மேன்மை  அறிந்து சரணடையும் நிலை ஏற்படும்.  வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். மார்ச் 27ல் இருந்து ஜூலை 7 வரை குடுபத்தினரிடம் விட்டுக்  கொடுத்து போகவும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய்கள் வரலாம்.  

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. அரசு  வகையில் அனுகூலம் உண்டு.
* வியாபாரிகள் மார்ச் 27ல் இருந்து ஜூலை 7வரை எதிரி தொல்லையை  முறியடித்து வெற்றி காண்பர்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் சீரான வளர்ச்சி காண்பர். வேலைப்பளு  இருந்தாலும் குருபலத்தால் கோரிக்கைகள் நிறைவேறும்.  ஆக.31க்கு பிறகு  நன்மை அதிகரிக்கும்.
* மருத்துவர்கள் ஆக.31க்கு பிறகு போட்டியாளர் தொல்லையில் இருந்து  விடுபடுவர்.
* ஆசிரியர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவர்.சிலருக்கு பதவி  உயர்வும் கிடைக்க வாய்ப்புண்டு.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆக.31க்கு பிறகு தடைகள்  விலகும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் குருபலத்தால் முன்னேற்றம்  காண்பர்.
* ஐ.டி., துறையினர் வேலையில் ஆர்வமுடன் ஈடுபடுவர். மேலதிகாரிகளின்  ஆதரவு கிடைக்கும். திறமையை வெளிப் படுத்தி நற்பலன் பெறுவர்.
* அரசியல்வாதிகளுக்கு ஆக.31 க்கு பிறகு சாதகமான காற்று வீசும். புதிய  பதவியும் கிடைக்கும். மக்களிடையே நற்பெயர் கிடைக்கும்.
* பொதுநல சேவகர்களுக்கு முயற்சியில் தடை, பண நஷ்டம், அவப்பெயர்,  போட்டிகள் முதலியன மறையும்.  முன்னேற்றத்துக்கு பெண்கள் மிகவும்  உறுதுணையாக இருப்பர்.
* கலைஞர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகும்.
* விவசாயிகளுக்கு நெல், மஞ்சள், பழ வகைகள் போன்றவற்றில் மகசூல்  அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
* மாணவர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். போட்டிகளில் வெற்றி காண்பர்.

சுமாரான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை எதிர்பார்த்த வருமானம்  கிடைக்காமல் போகலாம். எதிலும் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம்.
* வியாபாரிகளுக்கு கூட்டாளியிடம் கருத்து வேறுபாடு, வீண் அலைச்சல்  ஏற்படலாம்.
* வக்கீல்களுக்கு அலைச்சல் அதிகரிக்கலாம்.  வெளியூரில் தங்க நேரிடலாம்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மார்ச் 27 முதல் ஜூலை 7  வரை பணிச்சுமை அதிகரிக்கும்.
* அரசியல்வாதிகளுக்கு விரயம், திருட்டு சம்பவங்கள் ஏற்படலாம்.  
* விவசாயிகள் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை செலவு பிடிக்கும் பயிர்களை  பயிரிட வேண்டாம்.

பரிகாரம்:

●  சனிக்கிழமையில் பெருமாளுக்கு துளசிமாலை  
●  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு
●  வெள்ளிக் கிழமையில் பசுவுக்கு அகத்திக் கீரை

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021 »
temple
அசுவனி : பொறுப்பு அதிகரிக்கும். உழைப்பால் உயர்வீர்கள். பணிச்சுமையால் குடும்பத்தினருடன் செலவழிக்கும் ... மேலும்
 
temple
கார்த்திகை 2,3,4ம் பாதம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவீர்கள். ... மேலும்
 
temple
மிருகசீரிடம் 3, 4ம் பாதம் : சோதனையை சந்தித்தாலும் தைரியமுடன் செயல்படுவீர்கள். பேச்சு, செயலில் நிதானம் ... மேலும்
 
temple
புனர்பூசம் 4ம் பாதம் : சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நேர்மையால் பெயரும் புகழும் சேரும். சுபநிகழ்ச்சி ... மேலும்
 
temple
மகம் : வாழ்க்கைத்தரம் மேம்படும். மறைமுக எதிரிகளை அடையாளம் காண்பீர்கள். நிலுவையில் உள்ள வழக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.