Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குறை ஒன்றுமில்லை குரு பார்ப்பதாலே மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)ஜம்முன்னு இருக்கலாம் டும் டும் கொட்டலாம் சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அமோக வாழ்வளிப்பார் ஆறாமிடத்து சனீஸ்வரர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2019
12:20

உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!


சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ஆறாமிடத்தில்  இருப்பதால் அமோக வாழ்வு தரும் நிலையில் இருக்கிறார். அவரது  கருணையோடு இந்த புத்தாண்டு தொடங்குகிறது. ஆண்டு முழுவதும் நன்மை  தருவார். முயற்சி அனைத்தையும் வெற்றி அடையச் செய்வார். பணப் புழக்கம்  அதிகரிக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர்கள். புதிய வீடு,  மனை, வாகனம் வாங்கலாம்.

சனி, கேதுவால்  எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்து முடிக்கலாம்.  குருபகவானால் குடும்பத்தில் குழப்பம், பிரச்னை ஏற்படலாம்.  கணவன், மனைவி  ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையில் கருத்து  வேறுபாடு வரலாம். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். இருப்பினும் குருவின் 9 -ம் இடத்துப் பார்வையால் வருமானம் உயரும். மார்ச் 27ல் இருந்து ஜூலை 7  வரை திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். கணவன், மனைவி  இடையே அன்பு மேம்படும். சிலருக்கு வீடு கட்டும் யோகம் வரும். புதுமணத்  தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.  ஆக.31க்கு பிறகு பொன், பொருள் சேரும்.

பெண்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். பொருளாதார  வளம் பெருகும். அக்கம் பக்கத்தினர் தொல்லை மறையும். மார்ச் 27க்கு பிறகு  சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவர், குடும்பத்தாரின் மத்தியில் மதிப்பு உயரும்.  வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சகோதர வழியில்  உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். உடல்நலம் திருப்தியளிக்கும்.

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு சனிபகவான் பொருளாதார வளம், செயலில் வெற்றி  தருவார். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
* வியாபாரிகள் கூடுதல் லாபம் காண்பர். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை  மேம்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். கோரிக்கைகள்  ஒவ்வொன்றாக நிறைவேறும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரி பவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். புதிய  பதவியும் தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.  கோரிக்கைகளை ஆக.31க்குள் கேட்டு பெறவும்.
* மருத்துவர்கள் திறமையை வெளிப் படுத்தி  முன்னேற்றம் காண்பர்.  வேலைப்பளு பெருமளவு குறையும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
* வக்கீல்கள் தங்களின் வழக்கு களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர்.  வருமானம் அதிகரிக்கும்.  
* ஐ.டி., துறையினர் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை வேலையில் முன்னேற்றம் காண்பர். மேலதிகாரி களின் ஆதரவு கிடைக்கும்.
* அரசியல்வாதிகள் தொண்டர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.  தலைமையின் ஆதரவுடன் பதவி கிடைக்கும்.
* பொதுநல சேவகர்களுக்கு மார்ச் 27 முதல்  ஜூலை 7 வரை பணப்புழக்கம்  அதிகரிக்கும்.  
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
* விவசாயிகள் எதிர்பார்த்ததை விட கூடுதல் மகசூல் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து வாங்கலாம்.
* மாணவர்கள் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை குருபலத்தால் முயற்சிக்கு  பலன் கிடைக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கப் பெறுவர்.

சுமாரான பலன்கள்

* தொழிலதிபர்கள் ஆக.31க்கு பிறகு  அரசு வகையில் பிரச்னையை  சந்திக்கலாம். வரவு- செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.  
* வியாபாரிகள் ஆக.31க்கு பிறகு ராகு சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீண்  அலைச்சல் ஏற்படும்.
* ஆசிரியர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கம் சுமாராக  இருக்கும். அதிக வேலைப்பளுவை சுமக்க வேண்டியதிருக்கும்.
* அரசியல்வாதிகளுக்கு ஆக.31க்கு பிறகு விடாமுயற்சி அவசியம்.
* பொதுநல சேவகர்கள் ஆக.31க்கு பிறகு எதிர்பார்த்த பதவியை பெற முடியாது.
* கலைஞர்கள் ஆண்டின் பிற்பகுதியில் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  விருது கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

பரிகாரம்:
●  வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு
●  வெள்ளிக்கிழமை நாகதேவதைக்கு நெய் தீபம்
●  கார்த்திகையன்று முருகனுக்கு பாலாபிஷேகம்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.