பதிவு செய்த நாள்
31
டிச
2019
10:12
சபரிமலை : மகரவிளக்கு கால பூஜைகளுக்காக, சபரி மலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது ஜன., 15ல் மகரஜோதி தரிசனம் நடக்கிறது.
மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றினார். இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை, 3 மணிக்கு நடை திறந்த பின், தந்திரி கண்டரு மகஷே் மோகனரரு, நெய் அபிஷேகத்தை துவக்கி வைப்பார். ஜன., 19 வரை, எல்லா நாட்களிலும், அதிகாலை, 3.15 முதல், 11.30 மணி வரை, நெய் அபிஷேகம் நடக்கும் அனைத்து நாட்களிலும், காலை 7.30 மணிக்கு உஷபூஜை, மதியம் களபாபிஷேகம், உச்சபூஜை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம்,10 மணிக்கு அத்தாழ பூஜை நடக்கும். ஜன.,15ல், மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. மாலை, 6.30 மணிக்கு தீபாராதனைக்கு பின், பொன்னம்பலமேட்டில் ஜோதி தெரியும். அதிகாலை, 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகர சங்கரம பூஜை நடைபெறும். ஜன.,20 இரவு, 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஜன., 21 காலை 7 மணிக்கு நடை அடைக்கப்படும். மகரவிளக்கு கால வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் செய்யும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.