திண்டுக்கல்: திண்டுக்கல்பழநி, ஒட்டன்சத்திரம் ரோட்டோரத்தில் உள்ள பாதயாத்திரை நடைபாதை புதர் மண்டியுள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள புனித ஆன்மிக தலமான பழநி முருகன் கோயிலுக்கு, புத்தாண்டை முன்னிட்டு தற்போதே திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழநிக்கு செல்வது அதிகரித்துள்ளது.
இந்த நிலைமையில் திண்டுக்கல் பழநி ரோடு பகுதியில், ரெட்டியார் சத்திரம் மூலசத்திரம் வரை தனிப்பாதை பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து, செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டிக்கிடக்கிறது. ஒட்டன்சத்திரம்பழநி வரையும் பாதயாத்திரை பாதையும் புதர்மண்டி சேதமடைந்து கிடக்கிறது. அதனை பயன்படுத்த முடியாமல் பாதயாத்திரை பக்தர்கள் ரோட்டில் நடந்து செல்கின்றனர். இதனால் நேரத்தில் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. அடுத்தாண்டு தைப்பூசத் திருவிழாவையொட்டி, பொங்கல் விடுமுறை நாட்களில் பாதயாத்திரை பக்தர்களின் வருகை பலமடங்கு அதிகரிக்கும். ஆகையால் சேதமடைந்து, புதர்மண்டியுள்ள பாதயாத்திரை பாதையை உடனடியாக செப்பனிட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் விஜயலட்சுமி அதற்கு உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.