பதிவு செய்த நாள்
01
ஜன
2020
02:01
வெள்ளகோவில்:முத்துார், அத்தனுார்அம்மன், குப்பியண்ண சுவாமி, சின்னமுத்துார் செல்வ குமாரசாமி கோவில் கும்பாபிஷேக விழா தேதியை மாற்ற வலியுறுத்தி, பக்தர்கள் தக்காரிடம் மனு கொடுத்தனர்.முத்துாரிலுள்ள அத்தனுார் அம்மன் கோவில், குப்பியண்ண சுவாமி கோவில், சின்னமுத்துார் செல்வகுமாரசாமி கோவில் ஆகிய, 3 கோவில்களில் மகா கும்பாபிஷேகம் வரும், பிப்., 5ம் தேதி நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சூழலில், கோவிலுக்கு சேர்ந்த ஒரு சில குலத்தவர்கள், கும்பாபிஷேக தேதியை மாற்ற தக்கார் கண்ணதாசனிடம் மனு அளித்தனர்.கோவில் குலத்தவர்கள் கூறுகையில், ’கும்பாபி ஷேகம் நடக்கவுள்ள அதே நாளன்று, மாசி மகா சிவராத்திரி மற்றும் தேர்த்திருவிழா வருகிறது. எனவே, கும்பாபிஷேக தேதியை, சித்திரை மாதம் நடத்த வேண்டும்,’ என்றனர்.மனுவை பெற்ற தக்கார் கண்ணதாசன் கூறுகையில், ’இரு தரப்பினரிடையே பேசி சுமூக தீர்வு காணப்படும்,’ என்றார்.