உடுமலை: உடுமலை அருகே வாளவாடியில் 5ம் ஆண்டு ஸ்ரீ ஐயப்ப சுவாமி உற்சவர் திருவீதி யுலா, மண்டல பூஜை நடக்கிறது.இன்று ஜன., 1ம் தேதி காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோம மும், இங்குள்ள தெய்வங்களுக்கு விஷேச அபிஷேக ஆராதனை நடக்கிறது.காலை, 8:00 மணி க்கு வாண வேடிக்கையுடன் ஐயப்பசுவாமி திருவீதியுலாவும், பகல், 12:00 மணிக்கு ஐயப்ப பக்தர்களின் பொதுபஜனையும், நடக்கிறது.