கிருஷ்ணகிரி அருகே மாரியம்மன் கோவிலுக்கு இஸ்லாமியர் நன்கொடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2020 02:01
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் - பாலக்கோடு சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இக்கோவில் திருப்பணிக்காக, பக்தர்களும், பொதுமக்களும் கோவில் நிர்வாகத்திற்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.
அதன்படி காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டையை சேர்ந்த இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பூ வியாபாரி குதர்த் என்பவர், மாரியம்மன் கோவில் திருப்பணிக்காக, கோவில் கமிட்டி தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமியிடம், 10 ஆயிரத்து, 100 ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.