நாமக்கல்:புத்தாண்டையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி, அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நாமக்கல், அசெம்பிளி ஆப் காட் சபை, நாமக்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில், பங்கு தந்தைகள் ஜான் அல்போன்ஸ், அருள்சுந்தர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:00 முதல், நேற்று அதிகாலை, 4:00 மணி வரை சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர். நாமக்கல்-
திருச்சி சாலை, தமிழ் பாப்திஸ்து திருச்சபையில் போதகர் மனோவா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும், கணேசபுரம் சி.எஸ்.ஐ., சர்ச் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்து கொண்டனர்