பழநி: பழநி முருகன் கோயிலில் வி.ஐ.பி. தரிசனம் கடிதம் கொண்டு வருபவர்கள் ஆதார் டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட அடையாள அட்டை அவசியம் கொண்டுவர வேண்டும் என கோயில் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கடிதத்திற்கு 5 பேர் வீதம் ஒரு நாளைக்கு 300 பேருக்கு மட்டுமே தரிசன முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் கட்டணச்சீட்டு பெற வேண்டும். இலவச அனுமதி கிடையாது. மேலும் பார்கோடு சீட்டு வழங்குவதற்காக பக்தர்கள் ஆதார் கார்டு பான்கார்டு பாஸ்போர்ட் வாக்காளர் அட்டை டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட 16 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.