வைகுண்ட ஏகாதசி: வைணவ தலங்களில் பரமபத வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2020 07:01
சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் இன்று வைகுண்ட ஏகாதசி தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனையடுத்து சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இன்று 6 ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது. மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் காலை 5.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. திருப்பூரில் அமைந்துள்ள வீரராகவபெருமாள் கோவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக வெளி வந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.