பாலக்கோடு அடுத்த மணியகாரன் கிராமத்தில், பழமையான பால்வண்ணநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த, 12 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதில், சிவாச்சாரியார்கள் கோவில் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, பால்வண்ணநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போன்று இக்கோவில் மலை மீது உள்ள மருந்தீஸ்வர் கோவிலுக்கு புதிதாக கட்டப்பட்ட கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.