கிருஷ்ணராயபுரம்: பிள்ளபாளையத்தில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையத்தில் சபரிமலை செல்லும் பக்தர்கள் விரதம் இருந்தனர். நேற்று காலை பிடாரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றனர். இதில், அப்பகுதி சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.