பழநி முருகன் கோயிலுக்கு அலகு குத்தி, காவடியெடுத்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். பழநி முருகன் கோயிலுக்கு சபரிமலை சீசன், தொடர் விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தில், வெளி மாவட்டம், மாநில பக்தர்கள் அதிகாலை முதல் குவிந்தனர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில் 2 மணி நேரம் காத்திருந்தனர். மலைக்கோயிலில் பொது தரிசன வழியில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.நீலகிரியைச் சேர்ந்த பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், காவடிகள் எடுத்து ஆட்டம் பாட்டத்துடன் வந்தனர். பாதவிநாயகர் கோயில் அருகேவியாபாரிகள் தொந்தரவால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். அடிவாரம் பூங்காரோடு, அய்யம்புள்ளி ரோடு, திருஆவினன்குடிகோயில் பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்து கார், வேன்களை நிறுத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.