பதிவு செய்த நாள்
06
ஜன
2020
02:01
நாகை: சீர்காழியில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செயயப்பட்ட 108 திவ்யதேசங்களில் 28வது தலமான திருவிகரம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு, காலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றுது. இதனை முன்னிட்டு பெருமாள் ரத்திண அங்கி அலங்காரத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருள திருமங்கையாழ்வாரின் மங்களாசாசன பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து அதிகாலை 5:30மணிக்கு சொர்கவாசல் திறக்கப்பட்டு அங்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். பூஜைகளை கோயில் தலைமை அர்ச்சகர் பத்ரி தலை மையிலான பட்டாச்சாரியார்கள் செய்து வைத்தனர். தொடர்ந்து பெருமாள் வீதியுலா நடைபெற்றது. ,தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்த, கோவிந்தா என கோ ஷமிட்டு பெருமாளையும், ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் தரிசிக்க கூடிய பெருமாளின் வலது திருவடியையும் சேவித்தனர்.
இதனையடுத்து மயிலாடுதுறை திரு,ந்தளுரில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்சஅரங்க கோயில்களில் 5வது கோயிலாக அமைந்து ள்ள ஸ்ரீ பரிமள ரெங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ,ந்த கோயில், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வதுமானதும் ஆகும். ,ந்த கோயிலில் ஏகாதேசியை முன்னிட்டு, ,ன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெருமாள் தங்க ரெத்தின அங்கி அலங்காரத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப்பின், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை சேவித்தனர்.
தொடர்ந்து திருநாங்கூர் பகுதியில் அமைந்துள்ள 108 வைணவ திவ்யதேசங்களுல் நாங்கூர் மணிமாடக்கோயில் ஸ்ரீ நாராயணபெருமாள், அரிமேய வின்னகரம் ஸ்ரீ குடமாடுகூத்தர், ஸ்ரீசெம்பொன்னரங்கர், ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீவண்புருடோத்தமபெருமாள், ஸ்ரீவைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள், திருமேணிக்கூடம் ஸ்ரீ வரதராஜ பெருமாள், கீழச்சாலை ஸ்ரீ மாதவப்பெருமாள், பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய 11 பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.