திருப்பதி: பக்தர்களால் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருப்பதி திருமலை சீனிவாசப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவினை முன்னிட்டு கோவிலின் முகப்பு, பலிபீடம்,பங்காரு வாசல் உள்ளீட்ட கோவிலின் அனைத்து பகுதிகளும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து கோவிலுனுள் சென்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு உணவு தண்ணீர் மோர் போன்றவை வழங்கப்பட்டன. ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது. ரதத்தில் தேவியருடன் எழுந்தருளிய மலையப்ப சுவாமி மாடவீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.