பதிவு செய்த நாள்
26
ஏப்
2012
10:04
கடலூர்: கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மகா சம்ப்ரோக்ஷணத்தைக் காண, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோவிந்தா கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். ரூ.5 கோடியில் திருப்பணி : கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோவிலில் கடந்த, 97ம் ஆண்டு மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. தற்போது, கோவில் புதுப்பிக்கும் பொருட்டு கடந்த, 2009ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி, பாலாலயம் செய்து திருப்பணிகள் துவக்கப்பட்டன. ஐந்து கோடி ரூபாய் செலவில் கோவில் புதுப்பிக்கப்பட்டது.
யாகசாலை பூஜை : மகா சம்ரோக்ஷணத்தையொட்டி கடந்த, 22ம் தேதி காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. புலவனூர் கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில் திருமலை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 60க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் யாகசாலை பூஜையில் ஈடுபட்டனர். பட்டாச்சாரியார்கள் காலை 10.08 மணிக்கு மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தி வைத்தனர். பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது.