பதிவு செய்த நாள்
13
ஜன
2020
11:01
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செவிலிமேடு, ராமானுஜர் கோவிலில், வரும் சனிக்கிழமை அனுஷ்டான குளம் உற்சவம் நடைபெறுகிறது. அன்று மதியம், வரதராஜப் பெருமாள் ராமானுஜர் கோவிலில் எழுந்தருளுகிறார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், ஆண்டுதோறும் தை மாதம், செவிலிமேடு ராமானுஜர் கோவிலில் நடைபெறும் அனுஷ்டான குளம் உற்சவத்திற்கு செல்வது வழக்கம்.நடப்பாண்டு, வரும் சனிக்கிழமை இந்த உற்சவம் நடைபெறுகிறது. அன்று, காலை, 11:00 மணிக்கு, வரதர் கோவிலில் இருந்து புறப்பட்டு, ராமானுஜர் கோவிலை சென்றடைவார்.அங்கு பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு திருமஞ்சனம் நடைபெறும். பின், வரதராஜப் பெருமாள், வேடன் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.மாலையில், அங்கிருந்து புறப்பட்டு துாப்புல் வேதாந்த தேசிகன் கோவிலுக்கு செல்வார். அங்கு, பெருமாளுக்கு மரியாதை செலுத்தப்படும். அதன் பின், மீண்டும் கோவிலை சென்றடைவார்.