பதிவு செய்த நாள்
13
ஜன
2020
11:01
திம்மராஜம்பேட்டை:பொங்கலுக்கு, மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில், அய்யப்பனுக்கு தனி சன்னிதி உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று, சபரிமலையில் நடைபெறுவது போல, மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.நடப்பாண்டு, 15ம் தேதி பொங்கல் தினத்தன்று, காலை, 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் மாலை, 6:40 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.