பதிவு செய்த நாள்
13
ஜன
2020
02:01
கோவை, : காசி விஸ்வநாதர் கோவிலில் மட்டுமே நடக்கும் சப்தரிஷி ஆரத்தி, கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன் இருக்கும் யோகேஸ்வர லிங்கத்தில் நடந்தது.
கோவை, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில், 112 அடியில் ஆதியோகியின் மார்பளவு சிலை, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு சக்தியளிக்கும் விதமாக, யோகேஸ்வர லிங்கத்தை, சப்தரிஷிகளின் உருவங்களுடன் சத்குரு பிரதிஷ்டை செய்து உள்ளார்.இந்த லிங்கத்துக்கு, மூன்றாம் முறையாக நேற்று, சப்தரிஷி ஆரத்தி நடந்தது. காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து வந்திருந்த, ஏழு உபாசகர்கள் நடத்தினர். சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால், லிங்கத்தை அலங்கரித்து, மந்திரங்கள் உச்சரித்து, ஆரத்தியை மேற்கொண்டனர்.
சப்தரிஷி ஆரத்தியின் முக்கியத்துவம் பற்றி சத்குரு கூறுகையில், அகஸ்தியர் உள்ளிட்ட சப்தரிஷிகள், யோக விஞ்ஞானத்தை பரப்ப, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றனர். செல்வதற்கு முன், சிவனை இனி நேரடியாக காண முடியாதே என்ற ஏக்கத்தை அவரிடம் தெரிவித்தனர்.எனவே, சிவன் இந்த சப்தரிஷி ஆரத்தி எனும் செயல்முறையை வழங்கி, அதன் மூலம் தன் இருப்பை உணர்வதற்கு வழிவகுத்தார், என்றார்.சப்தரிஷி ஆரத்தி நிறைவு பெற்றதும், ஆதியோகி திவ்ய தரிசனம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.