மதுரை: தமிழகமெங்கும் மாட்டுப்பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் நேற்று பொங்கல்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, காலையில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்களின் மாடுகளை நீர் நிலைகளுக்கு அழைத்து சென்றனர். அங்கு மாடுகளை குளிக்க வைத்து அவற்றின் உடலில் வண்ண மையினால் வர்ணங்களை தீட்டினர். மேலும் மாட்டு கொம்புகளில் வர்ணம் பூசி, வண்ண கற்றாழை நாரை கட்டி அலங்கரித்தனர். பின்னர் மாட்டு தொழுவங்களில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு கொடுத்தனர். மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் மாட்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடினர். மாடுகளுக்கு ராஜ உபசாரம் நடந்தது.