திருப்பூர்: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருப்பூரில், அவரது சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடந்தது.திருப்பூர் மக்கள் மாமன்றம் சார்பில், மங்கலம் ரோட்டில், வாசக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் முன்புறம், திருவள்ளுவருக்கு சிலை வைத்து சிறிய அளவில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, அங்குள்ள அவரது சிலைக்கு நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. இதில், திருப்பூர் மக்கள் மாமன்ற நிர்வாகிகள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். சிலைக்கு மலர் துாவியும், திருக்குறள் வாசித்தும் பொதுமக்கள் வள்ளுவருக்கு மரியாதை செலுத்தினர்.