பதிவு செய்த நாள்
17
ஜன
2020
12:01
மதுரை, மதுரையில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயில் வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சுற்றுலா அலுவலர் பாலமுருகன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுசீலா ராணி முன்னிலை வகித்தார். மேலாளர் குணேஸ்வரன் வரவேற்றார். கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த நகர்வலம் யாகசாலை மண்டபத்தில் முடிந்தது. பொங்கல் வைத்து வழிபட்டனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.
* மதுரையில் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நீர்நிலைகளில் கழுங்கு பொங்கல் கொண்டாடப்பட்டது. நிறுவனர் அபுபக்கர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கண்ணன், இளவரசன், கர்த்திக் விஸ்வநாதன் பங்கேற்றனர். மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் நாகரத்தினம் பேசினார். வைகை நதி மக்கள் இயக்க நிர்வாகி ராஜன், எஸ்.ஐ., தியாக பிரியன், வழக்கறிஞர் ஜமாலுதீன் பங்கேற்றனர்.
* சொக்கிக்குளம் உழவர் சந்தையில் மதுரை விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிர்வாக அலுவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். உதவி நிர்வாக அலுவலர்கள் அசோக்மணி, ரமீலா, பரமேஸ்வரன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சந்தை பணியாளர்கள் திராவிடமாரி, பாக்கியநாதன், ஜெயராஜ் செய்திருந்தனர்.
* வள்ளலார் இயற்கை அறிவியல் மையம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. தமுக்கம் தமிழன்னை சிலைக்கு கருணை சபை சாலை நிறுவனர் ராம லட்சுமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிர்வாகிகள் சந்திர மோகன், செந்தில்குமார் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மைய நிறுவனர் சசாங்கன் செய்திருந்தார்.