புதுக்கோட்டையில் தேங்காய் வைத்து போர்க்காய் விளையாட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2020 12:01
புதுக்கோட்டை: பொங்கல்விழாவை முன்னிட்டு செரியலுாரில் தேங்காயோடு தேங்காய் மோதி உடைக்கும் போர்க்காய் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே செரியலூர், மேற்பனைக்காடு உட்பட பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் வித்தியாசமான போட்டி நடைபெற்றது. இதில் எதிரெதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வதும். இந்த மோதலில் உடையும் தேங்காயை மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்கான ஒரு போர் தேங்காய் ரூ.300 முதல் ரூ. 500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். ஒரே தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து கொண்டு செல்பவர்களும் உள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக செரியலுார் இளைஞர்களால் களம் அமைத்து போர் தேங்காய் உடைக்கும் போட்டியும் வெற்றி பெறும் தேங்காய்க்கு ரூ. ஆயிரம் பரிசும் அறிவிப்பர். நடந்த போர்க்காய் உடைக்கும் போட்டிக்கு முதல் பரிசு பெறும் தேங்காய்க்கு ரூ. 2001, இரண்டாம் பரிசு ரூ. 1001, மூன்றாம் பரிசு ரூ 501 மற்றும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த வித்தியாசமான போட்டியில் பலர் பங்கேற்றனர். பல சுற்றுகளில் போட்டியிட்டு கடைசி தேங்காயை உடைத்து வெற்றி பெற்ற தேங்காய்க்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.