இசையால் பக்தர்களை மயக்கிய இந்திய - திபெத் படை வீரர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2012 10:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா மற்றும் இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு முதன்முறையாக நேற்று பேண்டு வாத்திய நிகழ்ச்சி நடந்தது. சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் இந்திய-திபெத் எல்லைப்படை பயிற்சி முகாம் உள்ளது. இங்குள்ளவர்கள், கோயில் நிர்வாகிகளுடன் இணைந்து இதை வழங்கினர். மே 3 வரை தினமும் இரவு 7.30 முதல் 8.30 மணி வரை, கோயிலின் கிழக்கு வாசலில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. 1973ல் துவங்கிய இப்படை, நாட்டுக்கு என்ன செய்தது என்பதை விளக்கும் வகையில் பேண்டு வாத்தியங்கள் மாஸ்டர் சுரேந்தர்சிங் தலைமையில் இசைக்கப்பட்டன. டில்லியில் நடக்கும் குடியரசு தின நிகழ்ச்சிகளில் இப்படை இசைத்துள்ளது. தேசிய அளவில் அனைத்து போலீஸ் படைகளிலும் முதலிடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படையின் டி.ஐ.ஜி., பட்டாரியா, கண்காணிப்பாளர் ஜஸ்டின் ராபர்ட், முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் சுவீதா, கமாண்டன்ட் சாய்கோபிநாதன் கலந்து கொண்டனர்.