திருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் 108 விளக்கு பூஜை நடந்தது. பூஜாரிகள் சங்க மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட இணை அமைப்பாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.சிவாச்சாரியார் மணிகண்டன் குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. உலக நன்மைக்காக நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சுவாமியை வணங்கினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.