பதிவு செய்த நாள்
23
ஜன
2020
10:01
குளித்தலை: சிவாலயங்களில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, வழிபாடு நடந்தது. குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை, 5:00 மணியளவில் நந்தீஸ்வரருக்கு பால், நெய் தேன், பன்னீர், இளநீர், சந்தனம், தயிர்,திருநீறு மற்றும் வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் சுண்டல், பொங்கல் வழங்கப்பட்டது. இதேபோல், அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், மேட்டுமருதூர் ஆராஅமூதீஸ்வரர் கோவில்களில் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் நடந்தது. ஆர்.டி.மலை விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் நந்தீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.