பதிவு செய்த நாள்
28
ஏப்
2012
10:04
வேலாயுதம்பாளையம்: டி.என்.பி.எல்., ஆலை வளாகம் வல்லபை கணபதி கோவிலில் நடந்த சங்கடஹர சதுர்த்தி விஷேச பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி வழிப்பட்டனர். பிரசித்தி பெற்ற சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு மஹா கணபதிக்கு காலை 11 மணிக்கும், இரவு 7 மணிக்கும் பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சள் உட்பட பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பூக்களால் சர்வ அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், கடைவீதி பிள்ளையார் கோவில், புகழிமலை அடிவார ராஜ கணபதி கோவில், கூலக்கவுண்டனூர் விநாயகர் கோவிலும் சங்கடஹார சதுர்த்தி விழா நடந்தது.
* புகழிமலை பாலசுப்ரமணி ஸ்வாமி கோவிலில் சஷ்டி விழா நடந்தது. விழாவின் போ து உச்சி கணபதி, பாலசுப்ரமணிய ஸ்வாமிகளுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சள் உட்பட பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. பின்னர் பக்தர்களு க்கு பிரசாதம் வழங்கப்பட்டது.