பதிவு செய்த நாள்
29
ஜன
2020
01:01
பொங்கலுார்: பொங்கலுார் அருகேயுள்ள வலுப்பூரம்மன் கோவில் தைப்பூச திருவிழா இன்று துவங்குகிறது.இன்று இரவு விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தி, அனுக்ஞை, நாளை காலை, 7:00 மணிக்கு காப்பு கட்டுதல், கொடியேற்றம், மகாஅபிஷேகம், தீபாராதனை ஆகியனவும், 9:00 மணிக்கு அலகுமலை ரத வீதிக்கு அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது.வரும், 1ம் தேதி பகல், 2:00 மணிக்கு அலகுமலை கைலாசநாதர் கோவில் ரத வீதியில் திருத்தேர் வடம் பிடித்தல், அன்னதானம் நடக்கிறது.தைப்பூச விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் திலகவதி, தக்கார் செல்வம் பெரியசாமி, திருப்பணி குழு தலைவர் சிதம்பரம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.