பதிவு செய்த நாள்
29
ஜன
2020
01:01
திருத்தணி : திருத்தணி முருகப் பெருமான், தரணிவராகபுரம் கிராமத்தில், வரும், 31ம் தேதி, வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருத்தணி அடுத்த, தரணிவராகபுரம் கிராமத்தில், உற்சவர் முருகப் பெருமான் ஆண்டுதோறும், ஒரு நாள் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.அந்த வகையில், நடப்பாண்டில், வரும், 31ம் தேதி, உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோவிலில் இருந்து தரணிவராகபுரம் கிராமத்திற்கு சென்று, வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.மேலும், அன்று மாலை, பொன்னியம்மன் கோவில் வளாகத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.