பதிவு செய்த நாள்
29
ஜன
2020
01:01
கமுதி : கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உழவாரப் பணிகள், நாம் தமிழர் கட்சி சார்பில் நகர செயலாளர் தேவா தலைமையிலும், துணை செயலாளர் குருநாதன் முன்னிலையிலும் நடந்தது.
கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாதம் ஒரு முறை சிவபக்தர்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இம்மாதம் சிவ பக்தர்களுடன் இணைந்து, கமுதி ஒன்றிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும், கோயில் வளாகம் முழுவதும் குப்பை், பிளாஸ்டிக் கழிவுகள், பொருட்களை அகற்றி சீரமைத்து, மணல் மேடுகளை அகற்றினர். இதில் நாம் தமிழர் கட்சி கமுதி ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், பொருளாளர் வீர சின்னையா, நிர்வாகிகள் கண்ணன், இசையரசன், வடிவேலு, குருநாதன், ஆலய பராமரிப்பாளர் வினோத்குமார் பங்கேற்றனர்.