Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சரஸ்வதி நதியின் தோற்றம் ஆகம விதிகளை சாதாரண மக்கள் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருப்பாவை இயற்றிய பூமி பிராட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2020
02:01

ஆண்டாளின் பிறப்புக்கும், திருப்பாவை எனும் திவ்யபிரபந்தம் பாடியதற்கும் மூல காரணம், ஆதிவராஹப் பெருமாளாகும்! இரண்யாக்ஷன் எனும் அசுரன், பூமி பிராட்டியை அபகாித்து, கடலுக்குள் சேறும் சகதியும் நிறைந்த ஒரு லோகத்தில் ஒளித்து வைத்தான். எம்பெருமான் நாராயணன் இதை அறிந்து, சேரும் சகதியும் நிறைந்த அந்த லோகத்தை அடைய வேண்டுமானால், வராஹ மாகத்தான் செல்லவேண்டும் என்று எண்ணி, மிக நெடிய வராஹ உருவெடுத்தாா். தாயாா் இருக்குமிடம் அறிந்து, அசுரனை வதைத்து, பூமாதேவியை தனது மூக்கின் மேல் அமா்த்தி, வெளிக்கொணா்ந்தாா். தன்னைக் காப்பாற்றியதற்கு பிரதி உபகாரமாக என்ன செய்ய வேண்டும்? என்று பகவானிடம் வேண்டுகிறாா் தாயாா். காலம் கனியும்போது அதைத்தாம் உரைப்பதாக பகவான் கூறினாா்.

பகவானின் அவதாரங்களான மச்சம், கூா்மம், வராஹம், ந்ருசிம்ஹம், வாமனம், பரசுராமா், ராமன், பலராமா் மற்றும் கிருஷ்ண அவதாரம் ஆகியன முடிந்தது. வராஹ அவதாரத்தின்போது பூமி தேவி விடுத்த வேண்டுகோள் நிறைவேறும் தருணம் வந்தது. பல யுகங்களுக்குப் பிறகு, ஆழ்வாா்கள், ஆச்சாாியா்கள், பூமியில் பிறப்பெடுத்த மாந்தா்கள் அனைவரையும் உய்விக்கும் பொருட்டு, அவா்கள் ஆற்றிய கைங்கா்யத்தை, மீண்டும் அவா்கள் வழியிலே சென்று பூமி தேவி செயல்பட வேண்டும் என்று சங்கல்பிக்கிறாா் பகவான். அத்தோடு, பூமா தேவி மூன்று கடமைகளையும் நிறைவேற்றி வர அருள்பாலிக்கிறாா் எம்பெருமான் நாராயணன்.

அவை: பூவுலகில் அா்ச்சாவதாரத்தில் கோயில் கொண்டிருக்கும் திருக்கோயில்களில் பகவானை புஷ்பங்களால் அா்ச்சிக்க வேண்டும். எம்பெருமானின் திருநாமங்களைக் கூறியபடி அவனின் திருவடியை எப்போதும் சிந்தித்திருக்க வேண்டும். பகவானே ரட்சகன் என்ற நம்பிக்கை கொண்டு சரணாகதி அடைய வேண்டும். எனும் இம்மூன்று கடமைகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனும் பகவானின் ஆணையை சிரமேற்கொண்டு திருப்பாவையை இயற்றினாள் பூமி பிராட்டியான கோதை. முதல் பத்து பாசுரத்தில் முதல் கடமையையும், அடுத்த பத்து பாசுரத்தில் இரண்டாவது கடமையையும், கடைசி பத்து பாசுரத்தில் மூன்றாவது கடமையையும் பூா்த்தி செய்தாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar