பதிவு செய்த நாள்
30
ஜன
2020
12:01
மேச்சேரி: மேச்சேரி, அமரம், காமாட்சியம்மன் கோவில் பண்டிகை, கடந்த, 24, 25ல் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள், தங்களை விஷ ஜந்துக்கள் தீண்டக்கூடாது என வேண்டுதல் வைத்து, சர்க்கரை பொங்கல் வைத்தனர். தொடர்ந்து, உண்டியலில் காணிக்கை செலுத்தினர். நேற்று, அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜா, ஆய்வாளர் மணிமாலா, ஊராட்சி தலைவர் பாலமுருகன் முன்னிலையில், உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது. அதில், 3.23 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.