விழுப்புரம்:விழுப்புரம் ஜனகவல்லி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில், வரும் 1ம் தேதி ரதசப்தமி மகோற்சவ விழா நடக்கிறது.விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு சூரிய பிரபை, 9:00 மணிக்கு அனுமந்த வாகனம், காலை 10:30 மணிக்கு சஷே வாகனம், பகல் 12:30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு இந்திர விமானம், மாலை 5:30 மணிக்கு கற்பக விருட்சம் மற்றும் இரவு 7:00 மணிக்கு சந்திர பிரபை அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.