பதிவு செய்த நாள்
31
ஜன
2020
12:01
ஆனைமலை: கோட்டூர் மாகாளியம்மன் கோவிலில் நேற்று, கும்பாபிஷேக விழா நடந்தது.கோட்டூர் மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, 27ம் தேதி துவங்கியது. முளைப்பாரி இடல், திருமஞ்சன ஆகுதி, மலர் வழிபாடு நடந்தது.நேற்று காலை, 6:00 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜை, மலர் வழிபாடு நடந்தது. காலை, 9:00 மணிக்கு, யாக சாலை புறப்பாடு, கலச ஊர்வலம் நடந்தது.மாகாளியம்மன் கோபுரத்துக்கும், கோவில் சன்னதியில் உள்ள முருகன், விநாயகர் கோபுரத்துக்கும், கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை, கோ பூஜை, அன்னதானம் நடந்தது.வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி, முன்னாள் எம்.பி., மகேந்திரன், கோவில் திருப்பணிக்குழு தலைவர் பாலு பங்கேற்றனர்.