செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நாளை ரதசப்தமி விழா நடைபெற உள்ளது. செஞ்சி தாலுக்கா சிங்கவரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவிலில் ஒரே நாளில் ரங்கநாதர் 7 வாகனங்களில் மாட வீதிகளில் உலாவரும்ரதசப்தமி விழா நாளை (1ஆம் தேதி) நடக்க உள்ளது.
இதை முன்னிட்டு நாளை காலை காலை 6 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், காலை 8 மணிக்கு சஷே வாகை த்திலும், 10 மணிக்கு பெரிய திருவடி என்னும் கருட சேவையும், 12 மணிக்கு குதிரை வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது. பகல் 1 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு விசஷே திருமஞ்சனமும், மலர் அலங்காரமும் செய்ய உள்ளனர். மதியம் 2 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 4 மணிக்கு யானை வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் வீதி உலா நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை சிங்கவரம் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து செய்துள்ளனர்.