திருப்பூர்: திருப்பூர் சாமுண்டிபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
திருப்பூர் சாமுண்டிபுரத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று, கடந்த 28ம் தேதி, கும்பாபிஷேக விழா துவங்கியது. நான்கு கால யாக பூஜைகள் உள்ளிட்டவை நடந்தன..நேற்று காலை, 9:45 மணிக்கு, மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கூனம்பட்டி ஆதீனம், சரவண மாணிக்க வாசக சுவாமிகள் நடத்தி கொடுத்தனர். 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகக்குழு, நண்பர்கள் நற்பணிக் குழுவினர் செய்திருந்தனர். 24 நாட்களுக்கு மண்டல பூஜை மாலை, 6:00 மணிக்கு நடக்க உள்ளது.