பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி, சண்முகநதியில் மெய்த்தவம் பொற்சபை சார்பில் ஆன்மிக அமைப்புகள் இணைந்து 24 அடி ஐம்பொன் வேல் நிறுவியுள்ளன. வேலின் ஒருபுறம் ஆறுமுக நட்சத்திரமும், மறுபுறம் ‘ஓம்’ பொறிக்கப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சம் மதிப்புடைய இந்த வேல் சேலத்தில் செய்யப்பட்டது. நேற்று கார்த்திகையை முன்னிட்டு சண்முகநதிக்கு தீபாராதனையும், வேலுக்கு முதல் திருமுழுக்காட்டும் நடந்தது. விநாயகர், அம்பாளுக்கு அபிஷேகம், மஹாதீபாராதனை நடந்தது. பிப்.,9ம் தேதி நிறைவுத் திருமுழுக்காட்டுத் திருவிழா நடக்கிறது.