பதிவு செய்த நாள்
08
பிப்
2020
11:02
செஞ்சி:செஞ்சி அடுத்த மேல் எடையாளம் கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 3ம் தேதி சுவாமி விக்கிரகங்கள் கரிகோல ஊர்வலம் நடந்தது. 4ம் தேதி காலை விநாயகர் பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. 5ம் தேதி காலை விக்னேஷ்வர பூஜை, புனித நீர் எடுத்து வருதலும், மாலை முதல் கால யாகசாலை பூஜையும், கும்ப அலங்காரமும் நடந்தது.
6ம் தேதி காலை 8:00 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜையும், மாலை 3ம் கால யாக சாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையும், 8:45 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:15 மணிக்கு பூவாத்தம்மன், பரிவார தெய்வங்களுக்கும், 9:45 மணிக்கு கருமாரியம்மன், ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.