விழுப்புரம்:விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை சமரச சுத்த சன்மார்க்க சத்திய டிரஸ்ட் சார்பில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 5:30 மணிக்கு அருட்பெருஞ் ஜோதி தீபம் ஏற்றுதல், காலை 6:00 மணிக்கு அகவல் பாராயண வழிபாடு, காலை 7:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு திருத்தேர் வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.தொடர்ந்து, மாலை ஜோதி வழிபாடு, வள்ளலார் வரலாறு வில்லுப்பாட்டு, திருவருட்பா இசை முழக்கம், சிறப்பு சொற்பொழிவு, பட்டிமன்றம் நடந்தது.