பதிவு செய்த நாள்
09
பிப்
2020
04:02
நத்தம், :நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் நீர், விபூதி, பஞ்சாமிர்தம், புஷ்பம், திருமஞ்சணம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் செய்தனர். ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.கோயில் மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சாமிநாதபுரம் அருகே குட்டு மலையில் உள்ள பாலமுருகன் கோயிலிலும் அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், தைப்பூச சிறப்பு பூஜை நடந் தது. மூலவர், உற்சவருக்கு, பாலாபிஷேகம் நடந்தது. விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.கன்னிவாடி அருகே தோணிமலை முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயிலிலும் தைப்பூச சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.