மடத்துக்குளம்: மடத்துகுளம் அருகே உள்ள பாப்பான்குளம் தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா சிறப்புடன் நடந்தது.
பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழா நிகழ்ச்சி காலை 7 மணிக்கு, மங்கள இசையுடன் தொடங்கியது தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, பஞ்ச காவிய பூஜை ,இடும்பன், கடம்பன் பூஜை நடந்தன. இதனைத்தொடர்ந்து பல கிராமமக்கள் திரளா பால்காவடி புறப்பட்டு திருவீதி உலா நடந்தது. காலை 10 மணிக்கு பக்தர்கள் எடுத்து வந்த 1008 குடங்களில் இருந்த பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். பலநூறு பக்தர்கள் காவடி சுமந்து வந்து தங்களது நேர்த்தி க்கடனை செய்தனர். இதே பேரல, கடத்தூர் நடராஜர் கோவி லில் தைப் பூசத் திருவிழா நடந்தது நடரா ஜர் தேர் முக்கிய தெருக்களில் திருவீதி உலா சென்று திரும் பியது. கணியூர் ஜோதி கோவிலில், சமரச சுத்த சன்மார்க்க அருள் பெரும்ஜோதி வள்ள லார் பக்தர்கள் தைப்பூச விழா வழிபாடு நடத்தினர். இதில் திரளான பெண்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.