பதிவு செய்த நாள்
09
பிப்
2020
04:02
மணவாள நகர்:மணவாள நகர் அடுத்த, போளிவாக்கம் கிராமத்தில், தனியார் கல்விக் குழும வளாகத்தில் உள்ள சித்தி புத்தி சமேத கற்பக விநாயகர் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது.
மணவாள நகர் - - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், போளிவாக்கம் ஊராட்சியில், தனியார் கல்விக் குழு வளாகத்தில் உள்ளது சித்திபுத்தி சமேத கற்பக விநாயக் கோவில்.இந்த கோவிலில், மஹா கும்பாபிஷேக நாளான நேற்றுமுன்தினம், காலை, 7:30 மணி முதல், 9:00 மணிக்குள், கடம் புறப்பாடு நடந்தது. பின், காலை, 8:50 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனிதநீரால் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.அதை தொடர்ந்து, மூலவருக்கும், பரிவாரமூர்த்திகளுக்கும், மஹா கும்பாபிஷேகமும், மங்களஹாரத்தியும் நடந்தது.விழாவில் கல்விக் குழும நிறுவனர்கள் வளர்மதி, பாலசுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட பலர் பங்கேற்றனர்.