பதிவு செய்த நாள்
10
பிப்
2020
10:02
பழநி: பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். தேரடி தெப்பக்குளத்தில் நாளை தெப்போற்சவத்துடன் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது.
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூச விழா பிப்.2 ல் கொடியேற்றத்துடன் துவங்கி நாளை (பிப்.11) வரை நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து ஆட்டம் பாட்டத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் முத்துகுமராசுவாமி, வள்ளி, தெய்வானை சமேதமாக வெள்ளிகாமதேனு, ஆட்டுகிடா, யானை, பெரியதங்கமயில் ஆகிய வாகனங்களில் வீதியுலா வந்தனர். பிப்.7ல் திருக்கல்யாணம், பிப்.8ல் தேரோட்டம் நடந்தது. பத்தாம் நாளான நாளை (பிப்.11) காலை 8.45 மணிக்கு சப்பரத்தில் எழுந்தருளல், இரவு 7:00 மணிக்கு தேரடி தெப்பக்குளத்தில் தெப்போற்சவவிழா நடக்கிறது. இரவு 11:00 மணிக்கு கொடி இறக்குதலுடன் தைப்பூசவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெயச்சந்தர பானுரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.
முதுகில் தேர் இழுக்கும் பூசாரி: தைப்பூசத்தை முன்னிட்டு இக்கோயிலில் இருந்து ஆண்டுதோறும் தமிழகத்திற்குள் இருக்கும் முருகன் கோயில் ஒன்றிற்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். தற்போது 55வது ஆண்டாக தற்போதைய கோயில் பூசாரி வெங்கடேசன் முதுகினால் பழனிக்கு தேர் இழுத்து செல்ல, ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனர். பக்தர்கள் சிலர் 22 அடி நீள அலகை (வேல் கம்பி) வாயில் குத்தி வீதிகளை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.