திருவெண்ணெய்நல்லுார்;திருவெண்ணெய்நல்லுார் வெண்ணை வேலவர் சுவாமி கோவிலில் தைப்பூச விழா நடந்தது.திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள வெண்ணை வேலவர் சுவாமி கோவிலில் தைபூசத்தையோட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. சுவாமிக்கு பல வண்ண பூக்களில் அலங்காரம் செய்து, வெள்ளி கிரீடம் அணிவித்து வழிபாடுகளை நடத்தினர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.